Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதிதாசனின் உருவ சிலைக்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழக தலைவர் கி வீரமணி கூறியதாவது,
தந்தை பெரியாரால் புரட்சி கவிஞர் என பெயர் சூட்டப்பட்ட பாரதிதாசனின் பிறந்த நாள் இன்று.
பாரதிதாசனின் பிறந்தநாள் வாரம் தமிழ் வளர்ச்சி வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது,
பாரதிதாசனின் பிறந்த நாளை ஒரு நாள் அல்ல ஒரு வாரமாக தமிழ் வாரமாக தமிழ் வளர்ச்சி வாரமாக கொண்டாட வேண்டும் என உலக தமிழர்களின் வேண்டுகோளுக்கிணங்க திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
அவர் உத்தரவின் படி உலகம் முழுவதும் இன்று புரட்சி கவிஞரின் பிறந்தநாள் சிறப்பாக தமிழ் வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தேர்தல் முடிவுகள் தெளிவாக இருக்கிறது. மீண்டும் திராவிட மாடல் தான், மே 4 ஆம் தேதி மாலை வரை அவரவர்கள் கனவு காணலாம், கனவு எல்லாம் மே மூன்றாம் தேதி இரவோடு முடிந்து விடும். ஊடகங்கள் மிகப்பெரிய அளவிற்கு அவர் அவர்களுக்கு தோன்றியதை எழுதிக் கொண்டுள்ளார்கள்.
மக்கள் தெளிவாக உள்ளார்கள், தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.
புதிய ஆட்சியின் அத்தியாயம் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான்.
கோட்டை என்பது திராவிட மாடலுக்கு உரியதாக தான் இந்த முறையும் அமையும் மற்றவர்கள் கட்டுவது மனக்கோட்டை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b