வாடகை வீட்டை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்திய வழக்கு – வராகி என்ற நபர் மீண்டும் சிறையில் அடைப்பு
சென்னை, 03 ஏப்ரல் (ஹி ச) சென்னையில் வாடகைக்கு பெற்ற வீட்டை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வராகி என்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து,போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: குடியிருக்க வாடகைக
Hs


சென்னை, 03 ஏப்ரல் (ஹி ச)

சென்னையில் வாடகைக்கு பெற்ற வீட்டை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வராகி என்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து,போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

குடியிருக்க வாடகைக்கு எடுத்த வீட்டை சட்டவிரோத நிலமோசடி பதிவுகள், மிரட்டல் மற்றும் பணம் பறித்தல் போன்ற செயல்களுக்கு பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை காலி செய்ய கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வராகி, வீட்டின் உரிமையாளர் பெண்மணியை மிரட்டி, ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த வராகி, தொடர்ந்து பெண்களை மானபங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 மாத இடைக்கால ஜாமினில் வெளியே வந்த அவர், கடந்த 30.03.2026 அன்று மீண்டும் சிறையில் சரணடையவில்லை.

இதனால் நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வராகி மீது போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தல், மிரட்டி பணம் பறித்தல், பெண்களை ஆபாசமாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட மொத்தம் 15 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்குகள் தற்போது விசாரணையில் உள்ளன.

Hindusthan Samachar / P YUVARAJ