‘ஜீரோ-வேஸ்ட் மாடலில்’ 13 புதிய கோசாலைகள் அமைக்க திட்டம் - டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு
புதுடெல்லி, 30 ஏப்ரல் (ஹி.ச.) டெல்லி் கிஷன்கஞ்ச் பகுதியில் பிஞ்ச்ராபோல் சொசைட்டி நடத்தும் கோசாலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் இன்று நடைபெற்ற ‘பிராண பிரதிஷ்டை’ விழாவில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா பங்கேற்று தெய்வ சிலைகளுக்கு சி
Delhi Chief Minister Rekha Gupta Announces


புதுடெல்லி, 30 ஏப்ரல் (ஹி.ச.)

டெல்லி் கிஷன்கஞ்ச் பகுதியில் பிஞ்ச்ராபோல் சொசைட்டி நடத்தும் கோசாலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் இன்று நடைபெற்ற ‘பிராண பிரதிஷ்டை’ விழாவில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா பங்கேற்று தெய்வ சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

விழாவின் ஒரு பகுதியாக கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அவர் பசுந்தீவனம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது,

பசுக்களுக்கு சேவை செய்வது வெறும் மரபு மட்டுமல்ல, சமூகத்தின் கலாசார மற்றும் ஆன்மிகப் பொறுப்பு. இதற்காக அனைவரும் கூட்டாக முயற்சிக்க வேண்டும்.

டெல்லியில் பசு பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் 13 புதிய கோசாலைகள் ‘ஜீரோ-வேஸ்ட் மாடலில்’ உருவாக்கப்படும்.

தற்போது பல கோசாலைகள் குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான பசுக்களுடன் இயங்கி வருவதால், பசுக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்க, பசுக்களுக்கு போதுமான இடவசதியும் இயற்கையான சூழலும் அமைத்து தர அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய கோசாலைகள் கட்டி முடிக்கப்பட்டு இடமாற்றம் நிறைவடையும் வரை, தற்போதுள்ள கோசாலைகளில் அரசின் கால்நடை மருத்துவ சேவைகளும் அத்தியாவசிய வசதிகளும் தொடரும்.

டெல்லியின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு புதிய கோசாலை அமைக்க அரசு இலக்கு வைத்துள்ளது. இதற்கான இடங்களும் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கோசாலைகளில் உயிரி எரிவாயு ஆலைகள், கால்நடை மருத்துவமனைகள், சூரிய மின் நிலையங்கள் மற்றும் ஜீரோ-வேஸ்ட் மேலாண்மை அமைப்புகள் ஏற்படுத்தப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆறு உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தூய்மையை மேம்படுத்துவதோடு மின்சார உற்பத்திக்கும் உதவும்.

இவ்வாறு முதல்வர் ரேகா தெரிவித்தார்.

இவ் விழாவில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வடமேற்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேந்தர் சந்தோலியா, டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் விஜேந்தர் குப்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / vidya.b