அதி நவீன டிஸ்பெப்சியா சென்டர் துவக்கம்
கோவை, 30 ஏப்ரல் (ஹி.ச.) கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் “விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர்” திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேற்கு ஆஸ்திரேலியா அரசின் முன்னாள் அமைச்சர், அலனாஹ் மெக் டியர்னன் ஆஸ்திரேலியா அரசின் சட்டத்து
க்


கோவை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் “விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர்” திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேற்கு ஆஸ்திரேலியா அரசின் முன்னாள் அமைச்சர், அலனாஹ் மெக் டியர்னன் ஆஸ்திரேலியா அரசின் சட்டத்துறை தலைமை வழக்கறிஞரின் உதவி அமைச்சர் யாஸ் முபாரகாய் ஆஸ்திரேலியாவின் ரிவர்டன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன் பங்கேற்றனர்.

டிஸ்பெப்சியா சென்டர் குறித்து மூத்த குடலியல் நிபுணர், கல்லீரல் நிபுணர் மற்றும் எண்டோஸ்கோப்பி நிபுணர், விஜிஎம் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் கூறுகையில்,

ஜீரணக்குறைபாடு உலகளவில் 20 முதல் 30 சதவீத மக்களை பாதிக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். இதில் சுமார் 20 சதவீத நோயாளிகளில் மட்டுமே தெளிவான காரணம் கண்டறியப்படுகிறது.

மீதமுள்ள பெரும்பாலானவர்களுக்கு காரணம் தெரியாத ஜீரணக்குறைபாடு என வகைப்படுத்தப்படுகிறது.

இத்தகைய நோயாளிகள் பெரும்பாலும் முழுமையான ஆய்வுகள் இல்லாமல் பொதுவான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது என்றார்.

இதில் வி.ஜி.எம். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராதா பிரசாத், எண்டோஸ்கோபி இயக்குனர்கள் டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி; மருத்துவ இயக்குனர் டாக்டர் சுமன்,கல்லீரல் நிபுணர் டாக்டர் மித்ரா பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J