'ஜனநாயகன்' படம் இணையதளத்தில் வெளியான வழக்கு - துணிக்கடை மேலாளரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாக்கி தணிக்கை குழுவின் மறு ஆய்வில் இருந்த “ஜனநாயகன்” படம் இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் அசோக் நகர் காவல்
'Jananayagan'


சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாக்கி தணிக்கை குழுவின் மறு ஆய்வில் இருந்த “ஜனநாயகன்” படம் இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

அவர் தரப்பில், நான் பிரபல துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுகிறேன்.

சினிமா எடிட்டர் அல்ல,இந்த விவகாரத்தில் யாரிடமும் பணம் பெறவில்லை என்று வாதிடப்பட்டது.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் என்பவர் எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து படத்தை திருட்டுத்தனமாக நகலெடுத்து, உமா சங்கருக்கு அனுப்பியதாகவும், பின்னர் அவர் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், காவல்துறை தரப்பில் கூறுகையில் படம் எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து கசிந்துள்ளது.

பிரசாந்த் தனது லேப்டாப்பில் படம் பதிவிறக்கம் செய்து பிறருக்கு பகிர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பலரின் உழைப்பை பாதித்துள்ளது. நாளொன்றுக்கு 500 பேர் வீதம் 145 நாட்களுக்கு மேலாக உழைத்தவர்களின் முயற்சி வீணாகியுள்ளது.

எனவே குற்றவாளிகளை காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என வாதிடப்பட்டது.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், விசாரணைக்கு காவல் அவசியம் இருப்பதாகக் கருதி, உமா சங்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / vidya.b