Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 30 ஏப்ரல் (ஹி.ச.)
சாத்தான்குளம் தந்தை–மகன் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றமாக, கீழ்நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் வரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஜூன் 4ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழகமே உற்று நோக்கும் வழக்கு இது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், வழக்கின் முதல் குற்றவாளியான ஸ்ரீதர், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய 15 நாட்கள் பரோல் வழங்க கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமிழக அளவில் பெரும் கவனம் பெற்றுள்ள இந்த வழக்கில் அடுத்த கட்டமாக தினசரி விசாரணை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam