Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01-05-2026) ஞாயிற்றுக்கிழமைக்கான கால அட்டவணையில் சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,
நாளை 01-05-2026 (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01-05-2026) ஞாயிற்றுக்கிழமைக்கான கால அட்டவணை பின்பற்றப்படும்.
மெட்ரோ ரயில் சேவை காலை 05:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை பின்வரும் கால இடைவெளிகளில் இயக்கப்படும்:
பீக் நேரங்கள் (12:00 மணி - 20:00 மணி) இடைவெளி: மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒருமுறை கிடைக்கும்.
பீக் அல்லாத நேரங்கள் (05:00 மணி - 12:00 மணி & 20:00 மணி - 22:00 மணி) இடைவெளி: மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒருமுறை கிடைக்கும்.
நீட்டிக்கப்பட்ட பீக் அல்லாத நேரங்கள் (22:00 மணி – 23:00 மணி) இடைவெளி: மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை கிடைக்கும்.
பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b