டி.ஆர்.எஸ் பெயர் எனக்கு எழுதிப்போட்டது போல உள்ளது - கல்வகுந்த்லா கவிதா
ஹைதராபாத் , 30 ஏப்ரல் (ஹி.ச.) “டி.ஆர்.எஸ். என்ற பெயர் எனக்கு எழுதிப்போட்டதுபோல இருக்கிறது” என்று தெலங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கல்வகுந்த்லா கவிதா தெரிவித்துள்ளார். கல்வகுந்த்லா கவிதா புதிய அரசிய
T


ஹைதராபாத் , 30 ஏப்ரல் (ஹி.ச.)

“டி.ஆர்.எஸ். என்ற பெயர் எனக்கு எழுதிப்போட்டதுபோல இருக்கிறது” என்று தெலங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கல்வகுந்த்லா கவிதா தெரிவித்துள்ளார்.

கல்வகுந்த்லா கவிதா புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

இந்த கட்சிக்காக அவர் தெலங்கானா மாநில சேனா” என்ற பெயரை முதன்மையாக பரிந்துரைத்திருந்தார்.

ஆனால் மத்திய தேர்தல் ஆணையம் “தெலங்கானா ரக்ஷண சேனா” என்ற பெயருக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இருப்பினும் இரண்டு பெயர்களின் சுருக்கமும் “டி.ஆர்.எஸ்.” என்பதால் கவிதா மகிழ்ச்சி தெரிவித்தார்.

கட்சிக்கு அங்கீகாரம் வழங்கிய அதிகாரப்பூர்வ கடிதத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள், பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் வழங்கினர்.

இதையடுத்து சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட கவிதா,

தெலங்கானா ரக்ஷண சேனா (டி.ஆர்.எஸ்.) கட்சிக்கு மத்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளாக தெலங்கானா கலாசாரம் மற்றும் அதன் அடையாளத்தை பாதுகாக்க மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து செய்வேன்.

இனியும் தெலங்கானா அஸ்தித்வ பாதுகாப்பே எனது முக்கிய இலக்காக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், 2026 ஜனவரியில் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி 5 பெயர்களை பரிந்துரைத்து விண்ணப்பித்ததாகவும், அதில் 3-வது முன்னுரிமையாக வழங்கிய “தெலங்கானா ரக்ஷண சேனா” என்ற பெயருக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதோடு, “டி.ஆர்.எஸ். என்ற பெயர் எனக்கு எழுதிப்போட்டதுபோல உள்ளது” என்றும் அவர் சுவாரஸ்யமாக குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA