நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து
லக்னோ, 30 ஏப்ரல் (ஹி.ச.) சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில், சுவாதி நட்சத்திரம் கூடிய பிரதோஷ காலத்தில் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இது விஷ்ணுவின் 4-வது அவதாரமான நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட, தீமைகளை அழித்து பக்தனைக் காத்த
நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து


லக்னோ, 30 ஏப்ரல் (ஹி.ச.)

சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில், சுவாதி நட்சத்திரம் கூடிய பிரதோஷ காலத்தில் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இது விஷ்ணுவின் 4-வது அவதாரமான நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட, தீமைகளை அழித்து பக்தனைக் காத்த புனித தினமாக இந்து மக்களால் குறிப்பாக வட இந்தியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பக்த பிரகலாதனின் உறுதியான பக்தியைக் காத்தருளிய, மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமான ஸ்ரீ நரசிம்மரின் ஜெயந்தியை முன்னிட்டு மாநில மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீ நரசிம்மரின் கருணை அனைவரின் வாழ்விலும் வீரம், நேர்மை, சத்தியம் மற்றும் பக்தியை எப்போதும் ஒளிரச் செய்யட்டும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b