Enter your Email Address to subscribe to our newsletters

மேற்குவங்கம், 04 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்காளத்தில் தேர்தல் சூழ்நிலையில் அரசியல் குற்றச்சாட்டுகள் தீவிரமாகியுள்ளன.
அந்த மாநில முதல்வர் மமதா, மத்திய பாதுகாப்பு படையான CRPF வாகனங்களில் பணம் கடத்தப்படுகிறதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டம் ஹரிராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர்,
சி.ஆர்.பி.எப். வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கான ஆதாரங்கள் எனக்கிடம் உள்ளன.
சரியான நேரத்தில் அதை வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.
மேலும், மால்டா மாவட்டத்தில் நடந்த நீதிபதிகள் சிறைபிடிப்பு சம்பவத்தையும் அவர் அரசியல் சதி என குற்றம்சாட்டினார்.
அந்த சம்பவத்திற்கு பின்னால் பாஜக மற்றும் பிற கட்சிகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளிவரவில்லை.
இது அரசியல் குற்றச்சாட்டு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam