பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடிய மூக்கையாத் தேவரின் அரும்பெரும் பணிகளை போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்
சென்னை, 04 ஏப்ரல் (ஹி.ச.) பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட மூக்கையாத் தேவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என அம்மா மக்கள் முன்னேற்றக்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடிய   மூக்கையாத் தேவரின் அரும்பெரும் பணிகளை போற்றி வணங்கிடுவோம் -  டிடிவி தினகரன்


சென்னை, 04 ஏப்ரல் (ஹி.ச.)

பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட மூக்கையாத் தேவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் வழியில் தேசியத்தையும், தெய்வீகத்தையும் உயர்த்திப்பிடித்தவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவருமான உறங்காப்புலி கல்வி வள்ளல் ஐயா திரு P.K மூக்கையாத் தேவர் அவர்களின் பிறந்ததினம் இன்று.

மாணவப் பருவத்திலிருந்தே தன்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டு நீதி, நேர்மை மற்றும் நியாயத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாகச் செயல்பட்ட தேவர் தந்த தேவர் ஐயா திரு P.K மூக்கையாத் தேவர் அவர்களையும், அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b