Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 05 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியை சேர்ந்த டாக்டர் சதீஷ்குமார்(26) இவர் அப்பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் திண்டுக்கல்லில் இருந்து சின்னாளப்பட்டி நோக்கி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தோமையார்புரம் அடுத்த அனுகிரக பள்ளி எதிரே மதுரை நோக்கி திருச்சியை சின்னத்துரை என்பவர் ஓட்டி சென்ற லாரியை திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த டாக்டர் சதீஷ்குமார் லாரியின் மீது மோதி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J