Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 ஏப்ரல் (ஹி.ச.)
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நிறுவன நாளை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது, கட்சியின் வழிகாட்டும் கொள்கை “நாடு முதலில், கட்சி அடுத்து, தான் கடைசியில்” என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதில், நாட்டின் வரலாற்றுச் சாரத்தை மீட்டெடுப்பதில், இந்தியப் பண்பாட்டின் முக்கிய உணர்வுகளை வளர்ப்பதில் பாஜக எட்டியுள்ள சாதனைகளை அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அமித் ஷா தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளதாவது,
நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதாகட்டும், உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகட்டும், வளர்ச்சிக்கான புதிய அளவுகோல்களை அமைப்பதாகட்டும், அல்லது இந்தியப் பண்பாட்டின் வரலாற்றுச் சாரத்தையும் உயிர்த்துடிப்பான உணர்வையும் மீண்டும் தட்டி எழுப்புவதற்காகட்டும் – பாஜக இத்தனைத் தீர்மானங்களையும் செயல் வடிவில் நிரூபித்துள்ளது.
பாஜகவின் மைய மந்திரம் எப்போதும் தெளிவாகவே உள்ளது – ‘நாடு முதலில், கட்சி அடுத்து, தான் கடைசியில்’. இந்த அடிப்படை உணர்வுடன் ஒவ்வொரு பாஜக தொண்டரும் இரவும் பகலும் தேச சேவையில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM