Enter your Email Address to subscribe to our newsletters

உத்தரபிரதேசம், 06 ஏப்ரல் (ஹி.ச.)
உத்தரபிரதேசம் மீரட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் சர்மா, தனது மகள் ப்ரணிதா வாஷிஷ்டா விவாகரத்துக்குப் பிறகு வீட்டிற்கு வந்தபோது, மேளதாளம் முழங்க, மலர் மாலைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றார்.
மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பேரணியாக வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டாடியதும் கவனத்தை ஈர்த்தது.
மகள் திருமண வாழ்க்கையில் சந்தித்த மனஅழுத்தம் மற்றும் துன்பங்களால் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்றம் விவாகரத்தை வழங்கியதையடுத்து, குடும்பத்தின் முழு ஆதரவுடன் அவர் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மகள் சந்தோஷமாக இல்லாத வாழ்க்கையில் இருப்பதை விட, அவளை மகிழ்ச்சியாக வாழச் செய்வதே என் கடமை” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம், விவாகரத்தை தோல்வியாக அல்லாது ஒரு புதிய தொடக்கமாக பார்க்க வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுபொருளாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam