விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் 20 அடி உள்வாங்கியதால் போக்குவரத்து நிறுத்தம்
விழுப்புரம், 06 ஏப்ரல் (ஹி.ச.) விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் 20 அடி உள்வாங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலை பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலை போக்
மேம்பாலம்


விழுப்புரம், 06 ஏப்ரல் (ஹி.ச.)

விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் 20 அடி உள்வாங்கியதால்

போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலை பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வரும்

நிலையில் சிதம்பரம் அருகே எருக்கன்கட்டுப்படுகை பகுதியில் கொள்ளிடம்

ஆற்றுக்கு முன்பாக மேம்பாலம் சுமார் 20 அடி திடீரென உள்வாங்கியுள்ளது.

குறிப்பாக அந்த பகுதியில் பல்வேறு தற்காலிக பணிகள் மேற்கொண்டு வந்ததால்

நள்ளிரவில் ஏற்பட்ட பள்ளத்தை பார்த்த தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அருகில்

இருந்த குடியிருப்பு மக்களை நள்ளிரவில் வீட்டில் இருந்து காலி செய்யும்படி

கூறியுள்ளனர்.

தற்போது தொடர்ந்து பாலம் உள்வாங்கி வருவதால் போக்குவரத்து முற்றிலுமாக

துண்டிக்கப்பட்டுள்ளது.

தரம் இல்லாமல் அவசரக் கதியில் அமைக்கப்பட்ட சாலை என்பதால் தொடர்ந்து சேதம் ஆகி

வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam