Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஏப்ரல் (ஹி.ச)
சினிமாவில் பிரபலமான கவிஞரும் பாடலாசிரியரும் நடிகருமானவர் சினேகன்.
நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மையத்தில் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.
இவர் நடிகை கன்னிகாவை காதல் திருமணம் செய்து கொண்டார்
காதலித்து திருமணம் செய்துகொண்ட கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதிக்கு அண்மையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
தனது குழந்தைகளின் வீடியோக்களை கன்னிகா தொடர்ந்து வீடியோக்களாகப் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது வழக்கம்.
இந்த வீடியோக்கள் வைரலாகி பல மில்லியன் பார்வைகளை பெறும்.
சமீபத்தில் கன்னிகா பகிர்ந்த ஒரு வீடியோவின் கீழ், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குழந்தைகளைக் குறித்து மிகவும் கீழ்த்தரமான மற்றும் ஆபாசமான முறையில் கமெண்ட் செய்திருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கன்னிகா, ஆபாசமாக கமெண்ட் செய்த விக்னராஜ் எஸ்.ஜே என்பவரின் சமூக வலைதள பக்கத்தை வெளியிட்டு, அந்த நபரை வெறும் பிளாக் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கன்னிகா, அந்த நபர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும்
அந்த நபரின் சமூக வலைதளக் கணக்கை Child Abuse பிரிவின் கீழ் ரிப்போர்ட் செய்து முடக்கியுள்ளார்.
குழந்தைகள் தொடர்பான குற்றங்களுக்குச் சட்டத்தில் கடுமையான தண்டனை இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் விஷயத்தில் இது போன்ற அநாகரிகமான செயல்களைச் சட்டப்படி தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அந்த வீடியோவில் கன்னிகா பேசியுள்ளார்.
சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு மத்தியில், தனது குழந்தைகளுக்காகத் துணிச்சலுடன் புகார் அளித்த கன்னிகாவிற்குப் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ