விசாகப்பட்டினம் மௌனிகா கொலை வழக்கு - உடலை துண்டாக்கிய அதிர்ச்சி
விசாகப்பட்டினம், 09 ஏப்ரல் (ஹ.ச.) விசாகப்பட்டினத்தில் மௌனிகா கொலை வழக்கில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவீந்திரனை மூன்று நாட்கள் காவலில் வைத்து காஜுவாகா போலீசார் விசாரணை நடத்தியதில் சம்பவத்தின் உண்மை
A


விசாகப்பட்டினம், 09 ஏப்ரல் (ஹ.ச.)

விசாகப்பட்டினத்தில் மௌனிகா கொலை வழக்கில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவீந்திரனை மூன்று நாட்கள் காவலில் வைத்து காஜுவாகா போலீசார் விசாரணை நடத்தியதில் சம்பவத்தின் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முன்னதாக, மௌனிகா ரவீந்திரனின் வீட்டிலேயே கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் விசாரணையில், அவர் தனது நண்பரின் வீட்டிலேயே மௌனிகாவை கொலை செய்ததும், பின்னர் உடலை ட்ராலி பேக்கில் வைத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றதும் உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் உடலை துண்டுகளாக வெட்டி அகற்றியதாகவும் ரவீந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

ரவீந்திரன் (30), நேவியில் ஏர்கிராஃப்ட் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார்.

2021ஆம் ஆண்டு ஒரு டேட்டிங் செயலியின் மூலம் மௌனிகா (31) அவரை அறிமுகமானார். இந்த நட்பு தொடர்ந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ரவீந்திரன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் மௌனிகாவுடன் உறவைத் தொடர்ந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மார்ச் 29ஆம் தேதி மௌனிகாவை தனது வீட்டிற்கு கொண்டு வந்து கொலை செய்ததாக முதலில் ரவீந்திரன் தெரிவித்தார்.

ஆனால் சிசிடிவி காட்சிகளில் அவர் கூறிய தகவல்கள் பொருந்தாததால் போலீசார் சந்தேகமடைந்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், நண்பரின் வீட்டிலேயே கொலை நடைபெற்றது தெரிய வந்தது.

சம்பவ நாளன்று, நண்பர் வேலைக்குச் சென்றதை பயன்படுத்தி அவரது வீட்டுச் சாவியை எடுத்த ரவீந்திரன், மௌனிகாவை அங்கு அழைத்துச் சென்றார்.

அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மௌனிகா கூச்சலிட்டதால், அவளின் வாயை அடக்க முயன்ற ரவீந்திரன்,பின்னர் முழங்காலால் கழுத்தை அழுத்தியதில் அவள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கொலைக்குப் பிறகு, உடலை அங்கேயே விட்டு தனது வீட்டிற்கு சென்று பெரிய ட்ராலி பேக் கொண்டு வந்து, உடலை அதில் வைத்து தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

பின்னர் ஆன்லைனில் வாங்கிய கத்திகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி குளியலறையில் உடலை துண்டுகளாக வெட்டினார்.

சில உடல் பாகங்களை எரித்தும், மற்றவற்றை ஃப்ரிட்ஜில் வைத்தும் மறைக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூன்று நாள் காவல் முடிவடைந்த நிலையில், ரவீந்திரன் விசாக மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA