கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்- காதலனை ஏவி கொலை செய்து மூட்டை கட்டி வீசிய கொடூரம்..!
கர்நாடகா, 09 ஏப்ரல் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் ஹெப்பகோடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மசந்திராவில் தொழிற்பேட்டைக்கு அருகே சுமார் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் சாக்குபையில் அடைக்கப்பட்டு கிடந்துள்ளது.
கொலை


கர்நாடகா, 09 ஏப்ரல் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் ஹெப்பகோடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மசந்திராவில் தொழிற்பேட்டைக்கு அருகே சுமார் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் சாக்குபையில் அடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

இதனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் ரத்தம் வழிந்த நிலையில் கடந்த சாக்குப்பையைப் பார்த்து அதிர்ந்து போயினர்.

இதையடுத்து அவர்கள் உடனே காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த ஹெப்பக்கோடி போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய ஆய்வில் உயிரிழந்து கிடந்தவர் 42 வயதான சுனில் நாயக் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், வேறு மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான பாசுதேவ் மல்லிக் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது திருமணத்தை மீறிய உறவு கொடூரக் கொலைக்கு காரணம் என்பது தெரியவந்தது.

மேலும் சுனில் நாயக்கின் மனைவி புஷ்பாவுடன் கைதான பாசுதேவ் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

இந்த விவசாரம் சுனில் நாயக்கிற்கு தெரியவரவும் இருவரையும் கடுமையாகக் கண்டித்தள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாசுதேவ், புஷ்பாவுடனான தனது உறவைத் தடையின்றித் தொடர்வதற்காக, சுனில் நாயக்கைக் கொன்று விடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று, மது அருந்தலாம் எனக் கூறி சுனில் நாயக்கதை அழைத்துச் சென்றுள்ளார் பாசுதேவ்.

இருவரும் மது அருந்திய நிலையில், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சுனிலை, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி பாசுதேவ் கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சுனில் ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்ததும், அவரது உடலை ஒரு பிளாக்ஸ்டிக் பையால் சுற்றி சாக்குப்பையில் அடைத்து, தொழிற்பேட்டைக்கு அருகே வீசியதாகக் கூறப்படுகிறது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் மீட்டுள்ளனர்.

சாக்குப்பையில் சடலத்தை திணித்து வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P