Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதே போல் தூத்துக்குடி மாவட்டத்திலும் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் பல்வேறு இடங்களில் தீவிரச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சோதனைகளின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
இன்று வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் 77,01,696 ரூபாய் ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 5,05,477 ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு மொத்தம் 72,18,146 ரூபாய் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும்
தேர்தல் விதிமீறல்களைத் தவிர்க்கவும், முறையற்ற பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மாவட்டம் முழுவதும் சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b