இளைஞர் வாக்காளர்கள் வெளியே வர வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.) கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதள பதிவுகள் மூலம் மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மூன்று மாநிலங்களுக்க
மோடி


புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதள பதிவுகள் மூலம் மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மூன்று மாநிலங்களுக்கும் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிக்குமான தனித்தனி பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.

குறிப்பாக இளைஞர் வாக்காளர்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்து,

புதுச்சேரியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

அங்குள்ள மக்கள் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்.

இன்று நடைபெறும் தேர்தலில் புதுச்சேரி மக்கள் அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV