Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூர் கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பனை ஏறும் தொழிலாளிக்கும், சார்பு ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பனையேறும் தொழிலாளியை சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் பனையேறும் தொழிலாளி மணிகண்டன் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வளுத்து வரும் நிலையில், சார்பு ஆய்வாளர் உட்பட இரண்டு காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பதநீர் இறக்கும் பனையேறும் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட சார்பு ஆய்வாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகின்ற 11-ஆம் தேதி ஆலங்குளம் பகுதியில் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெற கூடாது எனவும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சார்பு ஆய்வாளர் உட்பட 2 காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கடையடைப்பு போராட்டமானது ஆலங்குளம் பகுதியில் மட்டும் 11 -ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பான நடவடிக்கை இல்லாத பட்சத்தில் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கன்னியாகுமரி மண்டல வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வைகுண்ட ராஜா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN