வேடசந்தூர் பகுதியில் அதிக இரைச்சலுடன் குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு
திண்டுக்கல், 09 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுரை, ஏரியோடு, கோவிலூர், ஆர்.கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 .45 மணியளவில் பயங்கர வெடிசத்தத்தை தொடர்ந்து, அதிக இரைச்சலுடன் குட்
Mini Flight


திண்டுக்கல், 09 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுரை, ஏரியோடு, கோவிலூர், ஆர்.கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 .45 மணியளவில் பயங்கர வெடிசத்தத்தை தொடர்ந்து, அதிக இரைச்சலுடன் குட்டி விமானம் பறக்கும் சத்தம் பயங்கரமாக கேட்டதை தொடர்ந்து அடுத்த நொடி நில அதிர்வு போல் ஏற்பட்டது.

அப்போது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் மற்றும் வாக்கு சேகரித்த தொண்டர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வானத்தை நோக்கி பீதியுடன் பார்த்தனர்.

இந்த பயங்கர வெடிச்சத்தத்தினால் சில நொடிகளுக்கு பிறகு பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டனர்.

வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் அடிக்கடி பயங்கர வெடி சத்தம் அதனைத் தொடர்ந்து அதிக இரைச்சலுடன் குட்டி விமானம் பறந்து வருவது எதற்காக என்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, பொது மக்களுக்கு அதன் விவரங்களை தெரிவித்து அச்சத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN