Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
அஸ்ஸாம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மக்கள் வாக்களிக்க வசதியாக இன்று பள்ளி, கல்லூரி மற்று அரசு அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வெவ்வேறு ஊர்களில் உள்ளவர்களும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றன.
பிற்பகல் 3 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் 72.40 சதவிகிதம், கேரளத்தில் 62.71 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 75.91 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
முன்னதாக 1 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் 56.83 சதவிகிதம், கேரளத்தில் 49.70 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 59.63 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b