நடிகர் அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து...!
தமிழ்நாடு, 01 மே (ஹி.ச.) தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவரும் பத்மபூஷண் அஜித்குமார் அவர்களுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள
எடப்பாடி பழனிச்சாமி


தமிழ்நாடு, 01 மே (ஹி.ச.)

தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவரும் பத்மபூஷண் அஜித்குமார் அவர்களுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்பக்கத்தில் தெரிவித்ததாவது,

தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷண் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், எளிமையான வாழ்க்கை முறையாலும், கார் பந்தய உலகில் சாதனைகளாலும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள அஜித்குமாருக்கு, அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam