சாலை விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்.பி ஹேமந்த் சாவ்ரா
தானே, 01 மே (ஹி.ச.) மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில், பாஜக எம்.பி ஹேமந்த் சாவ்ரா பயணித்த வாகனம் டம்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதில் காரை ஓட்டி
BJP MP Hemant Savra


தானே, 01 மே (ஹி.ச.)

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில், பாஜக எம்.பி ஹேமந்த் சாவ்ரா பயணித்த வாகனம் டம்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதில் காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பினார்.

அதிர்ஷ்டவசமாக பால்கர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காயமின்றி உயிர் தப்பினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தானே காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான காரின் அருகே எம்.பி ஹேமந்த் சாவ்ரா நின்றிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

காரின் முன்பக்கம் முழுவதும் நொறுங்கிய நிலையில், எம்.பி எந்தவித காயமுமின்றி இருப்பது கட்சியினரையும் ஆதரவாளர்களையும் நிம்மதியடையச் செய்துள்ளது.

தானே நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான கோட்பந்தர் சாலையில், தொடர்ந்து பராமரிப்பு மற்றும் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.

மே 30-க்குள் சாலை பணிகளை முடிக்குமாறு தானே மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பால்கர் மக்களவைத் தொகுதி எம்.பி-யான ஹேமந்த் சாவ்ரா, கட்சி நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி மும்பை – தானே மார்க்கமாக பயணம் செய்து வருகிறார்.

இன்றைய விபத்து குறித்து பாஜக மாநில தலைமை விசாரித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b