உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட விதிமுறைகள் குறித்த வழக்கு - தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 01 மே (ஹி.ச.) புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (Guaranteed Pension Scheme) அமல்படுத்த தேவையான விதிமுறைகளை வகுத்து அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நந்தகோபால் உள்ளிட்ட தமிழ்நாட
Case regarding regulations for the Assured Pension Scheme


சென்னை, 01 மே (ஹி.ச.)

புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (Guaranteed Pension Scheme) அமல்படுத்த தேவையான விதிமுறைகளை வகுத்து அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நந்தகோபால் உள்ளிட்ட தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில், உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 2026 ஜனவரி மாதத்திற்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு “சிறப்பு கருணை ஓய்வூதியம்” வழங்குவதற்கான தெளிவான விதிமுறைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, இந்த கோரிக்கைக்கு தொடர்பாக தமிழக அரசு தங்கள் நிலைப்பாட்டை 8 வாரங்களில் விளக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b