தமிழகத்தில் கொத்தடிமை வழக்குகளில் தண்டனை -சிறப்பு சாதனைக்கு சர்வதேச பாராட்டு
சென்னை, 01 மே (ஹி.ச.) தமிழகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னாவுக்கு Intern
Ijm


சென்னை, 01 மே (ஹி.ச.)

தமிழகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னாவுக்கு International Justice Mission (IJM) அமைப்பு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், கடந்த 2025 ஆகஸ்ட் முதல் 2026 ஏப்ரல் வரை மொத்தம் 12 கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டிருப்பது சிறப்பு சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொத்தடிமை முறைக்கு எதிரான சட்ட அமலாக்கம் வலுப்பெற்றுள்ளதாக IJM பாராட்டியுள்ளது.

மேலும், கொத்தடிமை வழக்குகளை 60 நாட்களுக்குள் முடிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பதையும் அந்த அமைப்பு வரவேற்றுள்ளது.

இது வழக்குகளின் விரைவான தீர்ப்புக்கு வழிவகுக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க அரசு எடுத்துவரும் தீவிர நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளுக்கும் IJM தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ