சம்யுக்த மகாராஷ்டிரா இயக்க தியாகிகளுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மரியாதை
மும்பை, 01 மே (ஹி.ச.) கடந்த 1955 நவம்பர் 1 அன்று புனேவில் கேசவ்ராவ் ஜெதே தலைமையில் சம்யுக்த மகாராஷ்டிரா சமிதியின் முன்னோடியான சம்யுக்த மகாராஷ்டிரா பரிஷத் நிறுவப்பட்டது. அப்போதைய பம்பாய் மாநிலத்தில் இருந்து மராத்தி பேசும் மக்களுக்காக, பம்பாயை
Devendra Fadnavis Pays Tribute


மும்பை, 01 மே (ஹி.ச.)

கடந்த 1955 நவம்பர் 1 அன்று புனேவில் கேசவ்ராவ் ஜெதே தலைமையில் சம்யுக்த மகாராஷ்டிரா சமிதியின் முன்னோடியான சம்யுக்த மகாராஷ்டிரா பரிஷத் நிறுவப்பட்டது.

அப்போதைய பம்பாய் மாநிலத்தில் இருந்து மராத்தி பேசும் மக்களுக்காக, பம்பாயை தலைநகராகக் கொண்ட தனி மாநிலம் கோரி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் 66-வது உதய தினத்தை முன்னிட்டு, மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

மகாராஷ்டிரா தினத்தையொட்டி தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இங்கு அனைவரும் கூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று மகாராஷ்டிரா நாட்டின் சக்தி இயந்திரமாகவும், வளர்ச்சி இயந்திரமாகவும் உள்ளது. அனைவருக்கும் மகாராஷ்டிரா தின வாழ்த்துகள்.

இன்று தொழிலாளர் தினமும் கூட. எனவே, அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். இன்று நாம் காணும் செழிப்பு அனைத்தும் அவர்களால் தான். எனவே, அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

மும்பை-புனே விரைவுச்சாலையின் ‘மிஸ்ஸிங் லிங்க்’ திட்டம் பாராட்டுக்குரியது. இத்திட்டம் இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை குறைப்பதோடு, போக்குவரத்து நெரிசலையும் தடுக்கும்.

இந்த திட்டம் மும்பை மற்றும் புனே இடையிலான தூரத்தை குறைப்பது மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசல் இல்லாததையும் உறுதி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b