Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 01 மே (ஹி.ச)
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இன்று ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌரியில் கங்கை ஆற்றில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
வெசாக் என்றும் அழைக்கப்படும் இந்த நாள், கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்ற நாள் மற்றும் மகாபரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
புனிதமான புத்த பூர்ணிமா நன்னாளில் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
அமைதி, கருணை மற்றும் நல்லெண்ணத்தின் பாதையில் நடக்கத் தூண்டும் இந்த புனித நாளில், பகவான் புத்தரின் வாழ்வியல் மதிப்புகளை ஏற்றுக்கொள்ளும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்வோம்
என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b