சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு அறிமுகம் - சென்னை மாநகராட்சி ஏற்பாடு
சென்னை, 01 மே (ஹி.ச.) சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை என இரு கட்டங்களாக வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் 2026-2027 ஆண்டிற்கான சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி சார்
QR Code Introduced for Property Tax Payment


சென்னை, 01 மே (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை என இரு கட்டங்களாக வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் 2026-2027 ஆண்டிற்கான சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சொத்து வரியை செலுத்த க்யூஆர் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ள சென்னை மாநகராட்சி தனது எக்ஸ் பக்கம் மற்றும் இணையதளங்களில் இந்த க்யூஆர் கோடு கிடைக்கும் என கூறியுள்ளது.

இதனைப் பயன்படுத்தி மக்கள் தங்களது சொத்துவரியை எளிதாக செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதால், வீடு வீடாகச் சென்று சொத்து வரியை வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டது.

தற்போது தேர்தல் பணிகள் முடிந்த நிலையில், வரி வசூலில் அதிகாரிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதற்காக சொத்து வரியை வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி எளிமையாக்கியிருக்கிறது.

சொத்து வரியை வசூலில் முதல்கட்டமாக முதல் பகுதியில் வரி செலுத்தாதவர்களில் 2 லட்சம் பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இரண்டாம் கட்டமாக, க்யூஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b