Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 01 மே (ஹி.ச.)
முருக பெருமானின் ஐந்து படை வீடுகளும் மலைகளில் அமைந்திருக்க, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டுமே கடற்கரையில் அமைந்துள்ள சிறப்பு பெற்றுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இன்று சித்ரா பவுர்ணமி தொடர் விடுமுறை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வெளிநாடுகள் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகமான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர்.
ஆனால் கோயிலை சுற்றிலும் நாளைக்கு என்ன வள்ளி குகை மற்றும் பிரகாரங்களில் அதிகமான பக்தர்கள் காணப்பட்டு வருகிறனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து விட்டு குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் 100 ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசனம் மற்றும் மூத்த குடிக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
கோவில் சார்பாக வரக்கூடிய பக்தர்களுக்கும் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் விடுமுறைக்காக கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.
இதனால் கோவில் முன்புள்ள கடற்கரை, கோவில் வளாக பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
மேலும் சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b