தூத்துக்குடி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் மீண்டும் தொடக்கம்
தூத்துக்குடி, 01 மே (ஹி.ச.) கடந்த ஏப்ரல் 23-ஆம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேதி பதிவான வாக்குகள், வரும் மே 4-ஆம் தேதி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன. இந்தியத் தேர்தல் ஆண
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் மீண்டும் தொடக்கம்


தூத்துக்குடி, 01 மே (ஹி.ச.)

கடந்த ஏப்ரல் 23-ஆம் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேதி பதிவான வாக்குகள், வரும் மே 4-ஆம் தேதி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை செயல்பட வேண்டும்.

அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டுப்பாட்டு அறை இன்று (மே 1) முதல் மீண்டும் தனது பணியைத் தொடங்கியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அறியவும், புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்களை அம்மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

அவை பின்வருமாறு,

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-599-1960

மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை: 0461-1950

இந்தக் கட்டுப்பாட்டு அறையில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்த தகவல்களை வழங்குவதற்கும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b