பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி, 01 மே (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளூர், தெங்கம்புதூர் மற்றும் பத்மநாபபுரம், கன்னியாகுமரி, கொல்லங்கோடு ஆகிய மூன்று நகராட்சிகள், 41 பேரூராட்சிகள் மற்றும் 92 ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்களின்
Water release from Pechiparai Dam begins tomorrow.


கன்னியாகுமரி, 01 மே (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளூர், தெங்கம்புதூர் மற்றும் பத்மநாபபுரம், கன்னியாகுமரி, கொல்லங்கோடு ஆகிய மூன்று நகராட்சிகள், 41 பேரூராட்சிகள் மற்றும் 92 ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை

(மே 2) முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா அறிவித்துள்ளார்.

அதன்படி மக்களின் அத்தியாவசியத் தேவையின் அடிப்படையில்,

பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் மே 2-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை (30 நாட்களுக்கு), வினாடிக்கு 40 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும்.

அணையின் நீர் இருப்பைப் பொறுத்து இந்த விநியோகம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b