Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மே (ஹி.ச.)
மருத்துவ பட்டப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வருகின்ற மே 3ம் தேதி தமிழகத்தின் 31 நகரங்களில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டுகளை விட தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ் மொழியில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழக அரசின் நட்புடன் உங்களோடு திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே,'டெலி கவுன்சிலிங்' (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் ”14416” அல்லது ”104” ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் தேவையான இதனை மாணவர்கள் இந்த சேவையினை பெற்று பயன்பெறுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b