Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 மே (ஹி.ச.)
உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் ஆண்டு தோறும் மே 10-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும், எலும்புகளையும் தாக்குகிறது.
தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமித்தொற்று, உணவுப்பழக்கம் போன்ற காரணங்களாலும், மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது.
ஆண்களை விட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால்,அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.
நோக்கம்:
இத்தினம், செஞ்சரும பல்லுறுப்பு நோய் (Lupus) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள்:
தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண், மூச்சு திணறல், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் தாக்கமாகும்.
Hindusthan Samachar / Durai.J