அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா 2-வது முறையாக இன்று பதவியேற்பு
கவுகாத்தி, 12 மே (ஹி.ச.) 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 81 இடங்களைக் கைப்பற்றி, மூன்றில் நான்கு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அசோம் கண பரிஷத் ஆகியவற்ற
Himanta Biswa Sarma takes oath as Assam


கவுகாத்தி, 12 மே (ஹி.ச.)

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 81 இடங்களைக் கைப்பற்றி, மூன்றில் நான்கு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அசோம் கண பரிஷத் ஆகியவற்றை உள்ளடக்கிய பாஜக தலைமையிலான கூட்டணி மொத்தம் 101 இடங்களை வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அசோம் கண பரிஷத் ஆகியவை தலா 10 இடங்களைப் பெற்றன.

அதன்படி அசாமில் 3-வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியைத் தொடர்ந்து, ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக இன்று பதவியேற்றார்.

கானாபாராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் நிதின் நபின், மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

சர்மாவுடன் நான்கு அமைச்சர்களும் பதவியேற்றனர். பாஜகவைச் சேர்ந்த இருவர் மற்றும் கூட்டணிக் கட்சிகளான அசோம் கண பரிஷத் (AGP) மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி (BPF) ஆகியவற்றில் இருந்து தலா ஒருவர் பதவியேற்றனர்.

அமைச்சர்களாக ரமேஸ்வர் தெலி, அதுல் போரா (AGP), சரண் போரோ (BPF) மற்றும் அஜந்தா நியோக் ஆகியோர் பதவியேற்றனர்.

மூத்த பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் குமார் தாஸ், சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b