மேட் இன் ஆந்திரா’ உலக தரத்திற்கு உயர்கிறது - நாரா லோகேஷ் பெருமிதம்
அமராவதி, 13 மே (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் உற்பத்தித் துறை வேகமாக வளர்ச்சி பெற்று வருவதாக மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி நாரா லோகேஷ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ''மேட
T


அமராவதி, 13 மே (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் உற்பத்தித் துறை வேகமாக வளர்ச்சி பெற்று வருவதாக மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி நாரா லோகேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில்,

'மேட் இன் ஆந்திரப் பிரதேசம்’ தற்போது தரத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் அடையாளமாக உருவெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியை எடுத்துக்காட்டும் சிறப்பு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “மொபைல் போன்கள், திரைகள், ஏர் கண்டிஷனர்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட இந்தியர்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் பல உலகத் தரம் வாய்ந்த பிராண்டுகள் தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் தயாராகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள், விரைவான திட்ட அமலாக்கம் மற்றும் வலுவான உற்பத்தி அமைப்பு ஆகியவையே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், “மேட் இன் ஆந்திரப் பிரதேசம் என்பது வேகமாக தரத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் புதிய அடையாளமாக மாறி வருகிறது. இந்த வளர்ச்சி பயணத்தில் நீங்களும் பங்கெடுக்குங்கள்.

ஆந்திரப் பிரதேசத்தில் தயாரியுங்கள்... உலகத்திற்காக தயாரியுங்கள்” என்று முதலீட்டாளர்களுக்கு லோகேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆந்திரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் பல முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி மையங்கள் மற்றும் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

முதலீடுகளை ஈர்த்து தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதை இந்த பதிவு வெளிப்படுத்துகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA