Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச)
முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் முக்கியப் பங்காற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
தவெகவின் செய்தித் தொடர்பாளராக ஊடகங்களில் அறியப்பட்ட இவருக்கு, இப்போது நேரடியாகவே அரசுப் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது.
இதற்கான அரசாணையில், தமிழக முதல்வரின் அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார்.
அவர் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும்.
இதற்கான பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்துத் தனியாக அறிக்கை வெளியிடப்படும் என குறிப்பட்டிருந்தது.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஜோதிடர் ராதன் பண்டிட்டிற்கு எதற்காக அரசு பதவி என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா, விசிக எம்எல்ஏ வன்னியரசு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய் இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கிய நியமன உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.
இதற்கான உத்தரவை அரசு முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் வெளியிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b