மதுபான விற்பனையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.50,000 கொள்ளை - போலீசார் விசாரணை
சீதாபூர், 13 மே (ஹி.ச.) உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாபூர் மாவட்ட மதுபானக் கடை விற்பனையாளர் கடையை மூடிவிட்டு சுர்ஜித் என்ற கேன்டீன் ஊழியருடன் நேற்று இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சாலையோ
Liquor Vendor Shot, Robbed of ₹50,000


சீதாபூர், 13 மே (ஹி.ச.)

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாபூர் மாவட்ட மதுபானக் கடை விற்பனையாளர் கடையை மூடிவிட்டு சுர்ஜித் என்ற கேன்டீன் ஊழியருடன் நேற்று இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒரு கும்பல் அவர்களின் வாகனத்தை வழிமறித்துள்ளது.

வாகனத்தை நிறுத்தியதும், அந்த கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. பின்னர் அவர்களிடமிருந்து சுமார் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை பணத்தை பறித்துக்கொண்டது. தாக்குதலின்போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், பின்னால் அமர்ந்திருந்த சுர்ஜித்தின் காலில் குண்டு உரசிச் சென்று காயம் ஏற்பட்டது. பின்னர் கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து ஏஎஸ்பி துர்கேஷ் குமார் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

வழக்கு விரைவில் கண்டுபிடிக்கப்படும். தற்போது அப்பகுதியில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

உத்தரப்பிரதேசத்தில் மதுபானக் கடை ஊழியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன.

சமீபத்தில் புதௌனில் ஒரு விற்பனையாளர் கொள்ளையின்போது சுட்டுக்கொல்லப்பட்டார். காஜியாபாத்தில் விற்பனையாளர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.

சீதாபூர் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இரவு நேரங்களில் மதுபானக் கடை ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b