நிதா கானுக்கு அடைக்கலம் கொடுத்த மஜ்லிஸ் கவுன்சிலர் வீடு இடிப்பு
மும்பை, 13 மே (ஹி.ச.) மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிதா கானுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் மஜ்லிஸ் கட்சி கவுன்சிலர் மதீன் பட்டேலின் வீடு மற்றும் அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள்
K


மும்பை, 13 மே (ஹி.ச.)

மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிதா கானுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் மஜ்லிஸ் கட்சி கவுன்சிலர் மதீன் பட்டேலின் வீடு மற்றும் அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்தனர்.

நாசிக் பகுதியில் உள்ள டி.சி.எஸ். அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படும் பாலியல் தொல்லை மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கில் நிதா கான் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு சத்திரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) பகுதியில் உள்ள மஜ்லிஸ் கவுன்சிலர் மதீன் பட்டேலின் வீட்டில் தங்கியிருந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து மதீன் பட்டேலின் வீடு மற்றும் அலுவலக கட்டிடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நரேகாவ் பகுதியில் உள்ள கவுசர் பார்க் பகுதியில் அமைந்துள்ள சுமார் 600 சதுர அடி வீடு தொடர்பான அனுமதி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த

மே 9-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மேலும், 72 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

இதற்கு கூடுதல் அவகாசம் கோரி மதீன் பட்டேல் உள்ளூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, சத்திரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை மதீன் பட்டேலின் வீடு மற்றும் அலுவலக கட்டிடங்களை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினர்.

நிதா கானுக்கு அடைக்கலம் வழங்கிய விவகாரம் வெளியான பிறகே இந்த சட்டவிரோத கட்டிடங்கள் குறித்து தகவல் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA