புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்ற என்.ரங்கசாமிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
சென்னை, 13 மே (ஹி.ச.) புதுச்சேரி மாநில முதலமைச்சராக என்.ரங்கசாமி ஐந்தாவது முறையாக பதவியேற்றதை தொடர்ந்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதுச்சேரி மாநில முதலமைச்ச
Anbumani


Nh


சென்னை, 13 மே (ஹி.ச.)

புதுச்சேரி மாநில முதலமைச்சராக என்.ரங்கசாமி ஐந்தாவது முறையாக பதவியேற்றதை தொடர்ந்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

புதுச்சேரி மாநில முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி ஐந்தாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,அவருடன் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயமும், என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணா ராவும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது உள்ளிட்ட உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.

மாநில முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனுக்கான அந்த முயற்சிகளில் புதுவை அரசு வெற்றி பெறுவதற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ