Enter your Email Address to subscribe to our newsletters

கவுகாத்தி, 13 மே (ஹி.ச.)
அசாம் மாநிலத்தின் பாதுகாப்பு விஷயத்தில் தனது அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா புதன்கிழமையன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கவுகாத்தியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சர்மா கூறியதாவது,
அசாமின் பாதுகாப்பு மற்றும் அசாமின் வளர்ச்சி குறித்து நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாகவே பேசுவோம்.
அசாம் மக்கள் மாநிலத்தின் எல்லைகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும், வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்வதும் எங்களின் பொறுப்பாகும்.
வரும் நாட்களில் எங்களின் பணிகளை நீங்கள் தொடர்ந்து காண்பீர்கள். எங்களின் பணிகளே எங்களுக்காகப் பேசும்.
வெறும் வார்த்தைகளுக்கு இப்போது எந்த மதிப்பும் இல்லை. மேடைப் பேச்சுகளுக்கும் தேர்தல் பிரச்சாரங்களுக்கும் உரிய காலம் முடிந்துவிட்டது.
எங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை, அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலமே நாங்கள் நிறைவேற்றுவோம்.
களத்தில் உண்மையான முடிவுகளை வழங்குவதிலேயே எங்கள் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
அசாமின் பாதுகாப்பு என்று வரும்போது, அதில் எவ்வித சமரசமும் இருக்காது. தேர்தலுக்கு முன்பு நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது.
அதற்கேற்பவே உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டவிரோத குடியேற்றம், அடையாள அரசியல் மற்றும் ஆக்கிரமிப்புகள் மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாநிலத்தில் தொடர்ந்து அரசியல் விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சரின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / vidya.b