Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 மே (ஹி.ச.)
தேசிய தலைநகர் டெல்லியில் இன்றிரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் டெல்லி மண்டல வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட தினசரி வானிலை அறிக்கை மற்றும் முன்னறிவிப்பின்படி,
அடுத்த ஏழு நாட்களில் டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
அதேநேரம், அடுத்த நான்கு நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் மிக லேசான மழையுடன் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 14 முதல் வானிலை படிப்படியாக தெளிவடையும் என்றும், மே 15 முதல் மே 18 வரை பெரும்பாலும் வானம் தெளிவாக காணப்படும்
மே 17, 18 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 15 முதல் வடமேற்கு இந்தியாவை புதிய மேற்கத்திய இடையூறு பாதிக்க வாய்ப்புள்ளது.
தற்போது வடக்கு பாகிஸ்தான், மேற்கு ராஜஸ்தான் மற்றும் வடக்கு மத்திய உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் மூன்று மேலடுக்கு சுழற்சிகள் நிலவி வருவதால், இவை பிராந்தியத்தின் வானிலை முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b