Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச)
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என தமிழக முதல்வர் த.வெ.க தலைவர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
ஆனால் முதல்வர் ஜோசர்ப் விஜய் தலைமையிலான தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், மே மாதத்திற்கான உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்வர் விஜயை திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b