பிஎஸ்எஃப் எல்லை வேலிக்கு நிலம் ஒப்படைப்பு பணி தொடங்கியது - மேற்கு வங்க அரசு தகவல்
கொல்கத்தா, 14 மே (ஹி.ச.) மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக அமைந்த பாஜக அரசு இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக எல்லை பாதுகாப்புப் படைக்கு (BSF) 45 நாட்களுக்குள் நிலம் வழங்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ்
Land Handover Process for BSF Border Fencing Begins


கொல்கத்தா, 14 மே (ஹி.ச.)

மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக அமைந்த பாஜக அரசு இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக எல்லை பாதுகாப்புப் படைக்கு (BSF) 45 நாட்களுக்குள் நிலம் வழங்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் அறிவித்தார்.

இது தொடர்பாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய திலீப் கோஷ்,

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் மற்றும் மாண்புமிகு மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்த அரசிடம் (மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்) தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர்.

ராஜ்நாத் , மம்தாவுடன் நேரடியாக சந்தித்துப் பேசினார். நிதி ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டதாகக் கூறி நிலம் கேட்டார். ஆனால் அவர்கள் வழங்கவில்லை.

அவர்கள் நிலம் தர முடியாது என்றும், நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினர்.

மாண்புமிகு அமித் ஷா ஜியின் முயற்சியால், 500-600 கிலோமீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்கும் பணி நீட்டிக்கப்பட்டது.

தற்போது 300-400 கிலோமீட்டர் பகுதி இன்னும் திறந்த நிலையில் உள்ளது. எல்லைப் பகுதியின் நிலவியல் மிகவும் கடினமானது

எனவே, எங்கள் அரசு பதவியேற்ற முதல் நாளிலேயே, மாண்புமிகு முதலமைச்சர் சுவேந்து ஜி, 45 நாட்களுக்குள் நிலம் கிடைக்க அனுமதி அளித்துள்ளார்.

இதை பிஎஸ்எஃப்-க்கு தெரிவித்துவிட்டோம். பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலி அமைக்கும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b