நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண் சடலம்- எஸ்.பி நேரில் விசாரணை
நாகப்பட்டினம், 14 மே (ஹி.ச.) நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தலையில் கடுமையான காயங்களுடன் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இது மர்ம மரணம் என கருதப்பட்ட நிலையில், போலீசார் நடத்தி
பலி


நாகப்பட்டினம், 14 மே (ஹி.ச.)

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தலையில் கடுமையான காயங்களுடன் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் இது மர்ம மரணம் என கருதப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த சித்ரா என்ற கவிதா என்பது தெரியவந்துள்ளது.

திருமணமாகி 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் மீது சிலர் கல்லால் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் கடை பகுதியில் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது உயிரிழந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam