Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் திருப்பூர் வாக்குச்சாவடியில் கூடுதலாக 47 வாக்குகள் பதிவானதாக கூறி, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.ஸ்ரீராதா தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் வாக்குச்சாவடியில் மொத்தம் 1,248 வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில், கூடுதலாக 47 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும், காவல்துறையும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்தலில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ