கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை - அம்மா இறந்த தூக்கம் தாங்காமல் மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
ராமநாதபுரம், 14 மே (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஆக்கிடாவலசை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிடாவலசை கிராமத்தைச் சேர்ந்த ராஜாம
கொலை


ராமநாதபுரம், 14 மே (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஆக்கிடாவலசை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆக்கிடாவலசை கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதனால் அவரது மனைவி ஜானகி கடும் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவர் உயிரிழந்த துக்கத்தை தாங்க முடியாமல் ஜானகி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தாயார் தூக்கிட்டு உயிரிழந்ததை பார்த்த அவரது இளைய மகன் தினேஷ் (23) அதிர்ச்சியிலும் வேதனையிலும் இருந்த நிலையில், ராமேஸ்வரம் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே குடும்பத்தில் கணவர், மனைவி மற்றும் மகன் என மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam