மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ராஜஸ்தான் பயணம்
புதுடெல்லி, 14 மே (ஹி.ச) முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் மற்றும் மெர்ட்டா நகரை நிறுவிய ராவ் தூடா மேர்தியா ஆகியோரின் சிலைகள் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ராஜஸ்தான் பயணம் மேற்கொள்
Union Minister Rajnath Singh visits Rajasthan today.


புதுடெல்லி, 14 மே (ஹி.ச)

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் மற்றும் மெர்ட்டா நகரை நிறுவிய ராவ் தூடா மேர்தியா ஆகியோரின் சிலைகள் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ராஜஸ்தான் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளுக்காக ஜோத்பூர் மற்றும் மெர்ட்டா நகரங்களுக்கு செல்லவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து,எக்ஸ் தளத்தில் அவர் இன்று பதிவிட்டிருப்பதாவது,

இன்று, மே 14ஆம் தேதி, நான் ராஜஸ்தானில் இருப்பேன். ஜோத்பூரில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் அவர்களின் சிலை திறப்பு விழாவிலும், மெர்ட்டாவில் ராவ் தூடா மேர்தியா அவர்களின் சிலை திறப்பு விழாவிலும் கலந்துகொள்ள உள்ளேன். இதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்

என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பைரோன் சிங் ஷெகாவத், 2002 ஆகஸ்ட் 19 முதல் 2007 ஜூலை 21 வரை இந்தியாவின் 11ஆவது குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவையின் தலைவராகவும் பணியாற்றினார்.

1952ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினராக தனது பொதுவாழ்க்கையை தொடங்கிய அவர், பின்னர் மூன்று முறை ராஜஸ்தான் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். ராவ் தூடா மேர்தியா, ரத்தோர் ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்த போர்வீரர் ஆவார்.

இவர் ரத்தோர்களின் மேர்தியா குலத்தை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b