Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மே (ஹி.ச.)
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII–TN), சென்னை சார்பில், “சொந்த யூடியூபப் சேனலை உருவாக்குவது எப்படி” என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி திட்டம் 25.05.2026 முதல் 27.05.2026 வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை EDII-TN வளாகம், சென்னை – 600 032 இல் நடைபெற உள்ளதாக தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த பயிற்சியில் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஆன்லைன் விளம்பர முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளன.
பயிற்சியில் இடம்பெறும் தலைப்புகள் பின்வருமாறு:
· வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்குதல்
· சமூக வலைதள சந்தைப்படுத்தல் மற்றும் சமூக வலைதள இணைப்பு
· வாடிக்கையாளர் வலையமைப்பை அதிகரிக்கும் முறைகள்
· திறமையான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நுட்பங்கள்
· ஆன்லைன் மார்க்கெட்டிங் முறைகள்
· டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் தொடர்பான அறிமுகம்
· இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிமுறைகள்
இந்த பயிற்சி, YouTube சேனலை தொடங்கி திறமையாக நிர்வகிக்க விரும்பும் தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கேற்கும் பயிற்சியாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்கும்
வசதி வழங்கப்படும். தங்கும் வசதி தேவையுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
முகவரி: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், எண் 1, EDI இன்ஸ்டிடியூட் சாலை, SIDCO தொழில்துறை எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600032.
தொலைபேசி / கைபேசி: 9360221280 / 8668100181
முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b